
தமிழ்நாட்டோடு புதுச்சேரி,கேரளா,அசாம்,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.
அதன்படி, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இவை அனைத்தும் ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டுகட்டங்களாகத் தேர்தல் நடக்கவிருக்கிறது.முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23,இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மேற்குவங்கத்தில் கடைசிகட்டமாக ஏப்ரல் 29 ஆம் தேர்தல் முடிவடைந்த பின்பு, ஐந்து மாநிலங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும்.அவை அனைத்தும் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.


