தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு,புதுச்சேரி, கேரளா,அசாம்,மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.இன்று மாலை 4 மணிக்கு தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது….

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரேகட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறும். மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9 ஆம் தேதி கடைசி நாள். தேர்தல் நாள் ஏப்ரல் 23, முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் மே 4.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response