
சட்டபையில் பேசிய சுற்றுப்புறச்சூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பவானி,காவிரி உள்ளிட்ட நதிகளில் கழிவுகள் கலப்பதில்லை எனப் பேசியுள்ளார்.
அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் நீர்நிலைகளையும்,காவிரி ஆற்றையும்,பவானி ஆற்றையும்,நொய்யல் ஆற்றையும் நேரில் களஆய்வு செய்துவிட்டு பதிலளிக்க வேண்டும்.
அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்தின் பேச்சு உண்மைமைக்குப் புறம்பானது.
காவிரியாற்றின் கிளை நதியான நொய்யல் ஆற்றில் ஆலைக்கழிவுகளும்,சாக்கடைக்கழிவு
மாசுக்கட்டுப்பாடு வாரியம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகத்தையே கோவை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.கொங்குநாடு ஜனநாயக கட்சி நிர்வாகிகள் நொய்யலின் ஆரம்பம் முதல் காவிரியில் கலக்கும் இடம் வரை முழுமையாகக் களஆய்வு செய்ததில் பல இடங்களில் எவ்விதத்தடையும் இல்லாமல் கழிவுநீர் கலந்தவண்ணமே உள்ளன.
எனவே உண்மைக்குப்புறம்பான தகவல் தரும் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.
மேற்கண்ட இடங்களுக்கு அமைச்சரை அழைத்துச்சென்று களஆய்வு செய்யவும் கொங்குநாடு ஜனநாயக கட்சி தயாராக உள்ளது.
