ஜோதிகாவுக்கு நன்றி – மகிழும் தஞ்சை மக்கள்

அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள். அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள்” என்று பேசியதாகச் செய்திகள் வெளீயாகின.

அதனால் சமூக வலைதளங்களில் அவருக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஜோதிகா பேசியது இதுதான் என்று சமூகவலைதளங்களில் உலாவரும் பதிவொன்றில்….‌

அவர் பேசியது பின்வருமாறு…..

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் அவ்வளவு அழகா இருக்கும்,போய்ப் பாருங்க என்று சொன்னார்கள்.. அன்று எனக்கு அரசு‌ மருத்துவமனையில் படப்பிடிப்பு இருந்தது..

அங்கே நான் கண்டதை வாயால் சொல்ல முடியாது.. அவ்வளவு மோசமாக பராமரிப்பு இருந்தது..
அன்று நான் மருத்துவமனையை பார்த்து விட்டு கோவிலுக்குச் செல்லவில்லை..

கோவிலைப் பராமரிக்க இலட்சக்கணக்கில் செலவு பண்றீங்க கோவில் உண்டியலில் காசு போடுறீங்க..‌

என்னுடைய வேண்டுகோள்
அதே அளவு பணத்தை அரசுப் பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் கொடுங்கள் என்பது மட்டுமே.

இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.

இது தொடர்பான சர்ச்சைகள் நன்மையில் முடிந்திருக்கிறதாம்.

அது குறித்து வெளியாகியிருக்கும் பதிவொன்றில்…..

என்னதான் சங்கிகள் ஜோதிகாவை ஆபாச வார்த்தைகளால் வசை பாடினாலும் மறுபுறம் அவருடைய கருத்து தஞ்சை மாவட்டத்தில் நல்ல முறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வந்து ஒரு மாதமாகியும் மருத்துவமனை பக்கமே வராத கலெக்டர் மற்றும் அதிகாரிகள் திடீரென அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்த நாள் வரை நோயாளிகளை பார்க்க வரும் பார்வையாளர்கள் கூடாரம் இன்றி திறந்த வெளியிலேயே நின்று வெயிலிலும் புளுதி காற்றிலும் காத்திருந்து பார்த்துவிட்டு செல்வார்களாம். ஆனால் இன்று மிகப்பெரிய இரண்டு பார்வையாளர்கள் நிழல் கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட மக்கள் மிகவும் மகிழ்ந்து கூறியுள்ளனர்.

மேலும், மருத்துவமனையின் குறைகள் நீக்கப்பட்டு நன்கு சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

நடிகை ஜோதிகா மருத்துவமனை குறித்து கருத்து கூறாமல் இருந்திருந்தால் இன்னமும் அம்மக்கள் சிரமத்தைதான் அனுபவித்திருப்பார்கள். அவரது விமர்சனத்தால்தான் இன்று பல நன்மைகள் ஏற்பட்டுள்ளது.

நமக்கேன் வம்பு, நடிச்சோம் போனோம் என அல்லாமல்.. மக்களுக்காக ஆதரவு குரல் எழுப்பிய ஜோவுக்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response