நடிகர் விஜய்யால் இன்னொரு உயிர் பலி – விவரம்

தஞ்​சாவூர் மாவட்​டம் செங்​கிப்​பட்​டி​யில் மார்ச் 4 ஆம் தேதி நடை​பெற்ற தவெக நிர்​வாகி​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பங்​கேற்க நடிகர் விஜய், திருச்​சிக்கு விமானத்​தில் சென்று, அங்​கிருந்து மகிழுந்து மூலம் செங்​கிப்​பட்டி சென்றார்.

அப்​போது, திருச்சி தேசியக் கல்​லூரி​யில் பி.​காம்., 3 ஆம் ஆண்டு படித்து வந்த மேல​கல்​கண்​டார்​கோட்டை மகாலட்​சுமி நகரைச் சேர்ந்த பாண்​டியன் மகன் விக்​னேஷ்(19), தனது நண்​பர் ஹாரூனுடன் இருசக்கர வாக​னத்​தில் விஜய் சென்ற மகிழுந்தைப் பின்​தொடர்ந்​தார்.

அப்போது விஜய்யின் மகிழுந்து அருகில் செல்ல முயன்றபோது, அவர்களது இருசக்கர வாகனம் வளம்​பக்​குடி என்ற இடத்​தில் சாலை​யில் நின்று கொண்​டிருந்த காவல்துறை வாக​னத்​தின் மீது மோதி​யது.

அதில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஹாரூன் ஆகிய இருவரும் நிலைதடுமாறி சாலையில் சென்ற மற்ற இருசக்கர வாகனங்களின் மீது விழுந்தனர். இதன் காரணமாக அடுத்தடுத்த வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த நிகழ்வில், விக்னேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே,அந்தவிபத்தில் கால்முறி​வு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற ஹாரூன் வீடு திரும்​பி​னார்.

இந்​நிலை​யில், கடந்த 20 நாட்​களாகத் தீவிர சிகிச்சைப் பிரி​வில் இருந்த விக்​னேஷ், நினைவு திரும்​பாமலேயே நேற்று பரிதாபமாக உயி​ரிழந்​தார்.

இதையடுத்​து, அவரது உடல், உடற்கூறு சோதனைக்​காக திருச்சி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்டது. இந்தவிபத்து குறித்து செங்​கிப்​பட்டி காவல்துறையினர் வழக்​குப் பதிவு செய்​து வி​சாரணை நடத்தி
வருகின்​றனர்​.

விஜய் போகுமிடமெல்லாம் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்து அப்பாவி உயிர்கள் பலியாகின்றன.அந்த வரிசையில் விஜய் கடைசியாக வாங்கிய காவு இந்தச் சாவு என்று கடும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response