கொரோனா சிக்கல் – அரசியல் தலைவர்களுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்

போர்க்கால உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர்
பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்….

வரலாறு இது வரை கண்டறியாத வகையில் கொடிய கொரோனா நோய் பரவி மக்களின் உயிர்களைப் பறித்து வருகிறது. இந்தக் கொடிய நோயைத் தடுத்து மனித சமுதாயத்தைப் பேரழிவிலிருந்து பாதுகாக்க வேண்டிய பெரும் கடமை, அரசுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உண்டு.

இதை உணர்ந்து கொள்ளாமல் அறிக்கைப் போர்களில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

தங்களின் உயிர்களையும் பொருட்படுத்தாது இந்தக் கொடிய நோய்க்கு எதிராகப் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், மக்கள் நல ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோருடன் இணைந்து நின்று மானிட சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்கும் அடுத்து நாம் எதிர்நோக்கவிருக்கும் பொருளாதார நெருக்கடியிலிருந்து ஏழை எளிய மக்களை மீட்பதற்கும் ஒன்றுபட்டு தொண்டாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மன வேறுபாடுகளை அடியோடு களைந்து ஒன்றுபட்டு இணைந்து நின்று போர்க்கால உணர்வுடன் பணியாற்ற முன் வருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response