பாண்டேவை தூக்கிப் பிடித்த ரஜினி கொதித்தெழுந்த குருமூர்த்தி – மோதல் ஆரம்பம்

மார்ச் 12 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்,

1. தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சிப் பதவிகள். தேர்தலுக்குப் பிறகு கட்சிப் பதவிகள் கலைக்கப்படும்.

2. தேர்தலில் அறுபது விழுக்காடு 50 வயதுக்குக் கீழே உள்ளவர்கள்தாம் போட்டியிட வேண்டும்.

3. கட்சித் தலைமை வேறு ஆட்சித் தலைமை வேறு.

இம்மூன்று விசயங்களையும் ரசிகர்களும் மக்களும் ஒப்புக்கொள்ளவேண்டும். இதைத் தெருத்தெருவாக மக்களிடம் போய்ச் சொல்லுங்கள் அவர்கள் ஏற்றுக்கொண்டால் வருகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இதனால் பலத்த சலசலப்புகள் உருவாகின.

இந்நிலையில் அதைச் சமாளிக்கும் விதமாக ரங்கராஜ் பாண்டே நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு என் கருத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்று சொன்னார் ரஜினிகாந்த். அதோடு ரங்கராஜ்பாண்டேவை சோ இராமசாமியோடு ஒப்பிட்டுப் பேசினார்.

இதனால் தற்போது துக்ளக் பத்திரிகையை நடத்திவரும் குருமூர்த்தி கோபமாகிவிட்டார் என்கிறார்கள். அதனால் அவர் ரஜினியை விமர்சித்து கேலிப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அது இணையதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

Leave a Response