முதல்கட்டத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எவ்வளவு இடங்கள்?

18 ஆவது மக்களவைக்கு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழுகட்டங்களாகத் தேர்தல் நடக்கவுள்ளது.அதன்படி முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடந்தது.

21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு அன்று நடைபெற்றது.

முதல்கட்டத்தேர்தல் ஏப்ரல் 19 –

தமிழ்நாடு 39, புதுச்சேரி 1, அருணாச்சல பிரதேசம் 2, அசாம் 5, பீகார் 4, சத்தீச்கர் 1, மத்தியபிரதேசம் 6,மகாராஷ்டிரா 5, மணிப்பூர் 2, மேகாலயா 2, மிசோரம் 1,நாகாலாந்து 1,இராஜஸ்தான் 12,சிக்கிம் 1,திரிபுரா 1, உத்தரபிரதேச்ம் 8,உத்தரகாண்ட் 5,மேற்கு வங்கம் 3,அந்தமான் 1,ஜம்முகாஷ்மீர் 1, இலட்சத்தீவு 1

மொத்தம் – 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

இந்தத் தேர்தலில் மோடி வேண்டாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழப்பதிந்திருப்பதாகவும் அதன் எதிரொலியை ஓட்டுப்பதிவன்று காண முடிந்தது என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,வாக்குப்பதிவு நடந்த மொத்தம் 102 தொகுதிகளில் சுமார் எண்பது தொகுதிகள் அல்லது அதற்கு மேலாகவும் இந்தியா கூட்டணி வெல்லும் என்று பலரும் சொல்கின்றனர்.

இதுதொடர்பாக காங்கிரசுக்கட்சித் தரப்பில், 102 தொகுதிகளில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது கூறியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்தியா கூட்டணிக்கு வெற்றி உறுதியாகிவிட்டது அது எண்பது விழுக்காடு அளவிலா? எழுபது விழுக்காடு அளவிலா என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என காங்கிரசுக் கூட்டணியினர் தெரிவிக்கின்றனர்.

Leave a Response