அதிமுக ரெண்டுபட்டதால் வாசனுக்குக் கொண்டாட்டம்?

அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,தம்பி துரை, கேபி முனுசாமி, ஜிகே வாசன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டதாக ஓபிஎஸ்- இபிஎஸ் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கட்சியினர் ஏமாற்றமடைந்திருக்கின்றனர்.

இந்த அறிவிப்பு வெளியானதும், பாஜக நெருக்கடி கொடுத்ததால் ஜி.கே.வாசனுக்கு இடம் கிடைத்தது என்றும் இதனால் தான் தேமுதிகவுக்கு இடம் கொடுக்காமல் வாசனுக்குக் கொடுக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால்,இவற்றைத் தாண்டி சொல்லப்படுகிற இன்னொரு கருத்தும் உலாவருகிறது. அது என்ன?

மாநிலங்களவைத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன் விளைவாகவே எடப்பாடி ஆதரவாளர் தம்பிதுரை,ஓ.பன்னீர் ஆதரவாளர் கே.பி.முனுசாமி ஆகியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

மூன்றாவது இடத்துக்கு இருதரப்பினரிடமும் போட்டி நிலவியதால் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டதாம். இந்த விசயத்தில் வெளிப்படையாகப் பேட்டி கொடுத்து நெருக்கடி ஏற்படுத்தியதாலும் சாதி அடிப்படையிலும் தேமுதிகவுக்குக் கொடுக்கவேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாம். இவற்றின் காரணமாகவே ஜி.கே.வாசனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்கிறார்கள்.

Leave a Response