கமல் ரஜினி குறித்து விஜயகாந்த் மனைவி கருத்து

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் ரஜினியின் அரசியல் வருகை குறித்த கேள்விக்குப் பதிலளித்தார்.

அப்போது அவர், ‘ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும். முதலில் அவர் கட்சி தொடங்குவார? மாட்டாரா? என்பதை ரஜினி தான் சொல்லவேண்டும் தமிழருவி மணியன் கிடையாது.கமலாவது களத்திற்கு வந்து விட்டார். ஆனால் ரஜினி இன்னும் களத்திற்கு வரவில்லை. நாங்கள் ரஜினியின் மீது மரியாதை வைத்திருக்கிறோம்.

ஆனால் அரசியலில் எப்படி இருப்பார் என்பது தெரியவில்லை. இப்போதுவரை அவர் நடிகர் தான். அரசியல் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது மிகப்பெரிய கடல். அப்படிப்பட்ட அரசியலில் எப்படி தன்னை எப்படி முன்னெடுத்த போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அரசியலில் ரஜினிகாந்த் நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். ரஜினி நிறைய குழப்பம் அடைகிறார். எந்த ஏழுபேர் என்று கேட்கிறார். ரஜினிக்கு யாரோ சொல்லிக் கொடுப்பதைப் போல தான் தெரிகிறது.அவர் சொல்வதெல்லாம் அவரின் சொந்தக் கருத்து அல்ல

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response