கொரோனா வைரஸ் 51 பேர் குணமடைந்தனர் சீனா மீண்டுவர உலகெங்கும் பிரார்த்தனை

சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா என்ற புதிய வைரஸ் தாக்கியது. இதனால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலால் 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 461 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மேலும் 1300 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 51 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். மேலும் இந்த வைரஸ் தாக்குதலால் இன்னும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதன்காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஹூபெய் மாகாணத்தை சேர்ந்த வூஹான் பெரு நகரத்தைச் சேர்ந்த கோடி மக்கள் உலகை விட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.உள்ளே செல்ல வெளியே வர யாருக்கும் அனுமதி கிடையாது.

ரயில்,பேருந்து,விமானங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன.

அங்குள்ள மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்வோம்.

அங்கு வாழும் குழந்தைகள் முதியோர் பிறந்த சிசுக்கள் மனநலம் குன்றியோர் கர்ப்பிணிகள் மருத்துவர்கள்
செவிலியர்கள் அனைவருக்கும் பிரார்த்திப்போம்

உலகத்திடம் இருந்து “தனிமைப்படுத்தப்படுதல்” ஒரு கொடும் தண்டனை.

ஆனால் இது போன்ற கொடும் தொற்று நோய் பரவும் சூழ்நிலையில் ஒரு பெரும் நகரத்தை தனிமைப்படுத்துதல் அவசியம் ஆகிறது

சீக்கிரம் மீண்டு வா சீனா என்கிற பிரார்த்தனைக் குரல்கள் உலகெங்கும் ஒலிக்கின்றன.

Leave a Response