உ.பி யில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி – அதிர்ச்சி தகவல்

ராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன.இதற்கு,உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலே‌‌ஷ் யாதவ் நேற்று லக்னோவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோடாவில் ஏற்பட்ட மரணம் குறித்து யோகி கவலைப்படுகிறார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடந்த மரணங்கள் குறித்து அவர் எப்போது கவலைப்படுவார்?

அங்கு கடந்த 12 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளனர். மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு வேறு மருந்துகள் தரப்பட்டுள்ளன. ஏன் தவறான மருந்துகள் தரப்பட்டன? இதற்கு பதில் சொல்லப் போவது யார்? இதில் உண்மை வெளிவர வேண்டும். இறந்த குழந்தைகள் பட்டியலை விரைவில் வெளியிடுவேன்” இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response