ரஜினிக்கு சீமான் உடனடி பதிலடி

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராக நாடெங்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேரெழுச்சியாகத் திரண்டு போராடிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டிவிட்டரில் 19-12-2019 இரவு 11 மணியளவில் வெளியிட்டுள்ள கருத்துக்கு,அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் தனது எதிர் கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கருத்து,

எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வுகாண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக்கூடாது. தேசப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது.

சீமான் எதிர்கருத்து…

பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாதுதான்! வன்முறை செய்தது யார்? குடியுரிமைச் சட்டத்திருத்தம் பற்றிய‌ உங்களது கருத்தென்ன? ஏற்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்த முடியாது!

இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response