ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி.வெற்றி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராகப் போராடிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் திரு.ஈசன் உள்ளிட்ட ஐந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்க, 16/09/19 அன்று *கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்* மற்றும் *ஏர்முனை இளைஞர் அணி* சார்பாக *அறவழி ஆர்ப்பாட்டம்* பல்லடம் கொசவம்பாளையம் சாலையில் நடத்த காவல்துறையிடம் முறைப்படி அனுமதி கோரப்பட்டது.ஆனால் கடைசி நேரத்தில் அது மறுக்கப்பட்டது.
இருந்தபோதும் *ஜனநாயக நாட்டில் அமைதி வழியில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் அமைதி வழியில் அறவழி ஆர்ப்பாட்டம், நூற்றுக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற நடைபெற்றது.
தடையை மீறியதாக பல்லடம் காவல்துறை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் டாக்டர் தங்கராஜ், மாநில துணை தலைவர் கே.பி.சண்முகசுந்தரம்,கொபசெ குண்டடம் ராசு, திருப்பூர் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் தங்கவேல்,கோவை மாவட்டத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் ஏர்முனை இளைஞர் அணி சுசீந்திரன், குண்டடம் செல்வராஜ், பல்லடம் கௌதம் உள்ளிட்டோரையும் கைது செய்து இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
தற்போது கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாகப் போராடி கைது செய்யப்பட்டவர்கள் 27 பேருக்கு பல்லடம் காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அஞ்சாநெஞ்சங்கொண்டு வாழ்ந்து மறைந்த உழவர் காவலர் மாமேதை என் எஸ் பி அவர்களால் உருவாக்கப்பட்டு அவர் வழியில் உழவர் நலனுக்காகத் தொடர்ந்து களத்தில் போராடிக்கொண்டிருக்கும் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி இந்த வழக்குகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
தங்கள் நிலத்தைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உழவர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடியதற்கு வழக்குகள் பதிவு செய்த பல்லடம் காவல்துறைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று மட்டுமல்ல என்றும் உழவர்களின் உற்ற தோழனாக எதற்கும் அஞ்சாமல் களத்தில் நின்று போராட கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக உறுதியேற்கிறோம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.