நடிகர் கமலின் 65 ஆவது பிறந்தநாள் மற்றும் அவரது கலையுலகத்தின் அறுபதாண்டு ஆகியனவற்றை கொண்டாடும் விதமாக நேரு உள்விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சி நடந்தது.
இளையராஜா கலைநிகழ்ச்சி நடத்தினார்.
விழாவில், ரஜினி,சிவக்குமார், சரத்குமார்,ஏ.ஆர்.ரகுமான்.விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது….
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று பெரிதும் எதிர்பார்த்தேன்.ஆனால் கமல்ஹாசன் துணிச்சலாக அரசியலுக்கு வந்துவிட்டார்.ரஜினிகாந்தும் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்று இரும்புகிறேன்.இரு ஜாம்பவான்களும் அரசியலில் சாதிப்பது நிச்சயம்.
என் ஆசை என்னவென்றால் கமல் ரஜினி ஆகிய இருவரும் சேர்ந்தால் தமிழகத்துக்கும் தமிழருக்கும் நல்லது. இருவருமே கலை உலகின் மூத்த பிள்ளைகள்.இருவரும் இணைந்தால் கலை உலகமே பின்னால் நிற்கும். எனவே அரசியலில் இருவரும் ஒன்று சேரவேண்டும்.
தமிழன் அது இதுவென ஏதேதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டு தண்ணீர் குடித்தாலே அவன் தமிழன் தான். வேறு எதுவும் சொல்வதற்கில்லை.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பது நியதி.எனவே ஆண்டவர்கள் இனி ஆளப்போகிறவர்களுக்கு வழி விடட்டும்.ஆண்ட பின்னர் இது போதுமென நினைத்து தம்பிமார்களுக்கு வழிவிட்டுச் செல்லுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கமல் ஏற்கெனவே கட்சி தொடங்கிவிட்டார், ரஜினி தொடங்குவதாகச் சொல்லியிருக்கிறார்/ இன்னும் தொடங்கவில்லை.
இந்நிலையில் கமலும் ரஜினியும் இணையவேண்டும் என்று இவர் பேசியிருப்பதால் கமல் கட்சியில் ரஜினி இணைய வேண்டும் என்று சொல்கிறார்.
அதை நேரடியாகச் சொல்லாமல் இருவரும் இணைந்தால் தமிழகத்துக்கு நல்லது என்று சொல்லியிருக்கிறார் என்கிற கருத்து பகிரப்பட்டு வருகிறது.