தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம்,நேற்று அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
2020 ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள் தமிழக அரசால் அறிவிக்கப்படுகிறது.
நாள், பொது விடுமுறைக்கான காரணம், கிழமை விவரம் வருமாறு:-
சனவரி 1-ந்தேதி – ஆங்கிலப் புத்தாண்டு – புதன்கிழமை
சனவரி 15-ந்தேதி – பொங்கல் – புதன்கிழமை
சனவரி 16-ந்தேதி – திருவள்ளுவர் தினம் – வியாழக்கிழமை
சனவரி 17-ந்தேதி – உழவர் திருநாள் – வெள்ளிக்கிழமை
சனவரி 26-ந்தேதி – குடியரசு தினம் – ஞாயிற்றுக்கிழமை
மார்ச் 25-ந்தேதி – தெலுங்கு வருடப்பிறப்பு – புதன்கிழமை
ஏப்ரல் 1-ந்தேதி – வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு – புதன்கிழமை
ஏப்ரல் 6-ந்தேதி – மகாவீர் ஜெயந்தி – திங்கட்கிழமை
ஏப்ரல் 10-ந்தேதி – புனித வெள்ளி – வெள்ளிக்கிழமை
ஏப்ரல் 14-ந்தேதி – தமிழ்ப் புத்தாண்டு – செவ்வாய்க்கிழமை
மே 1-ந்தேதி – மே தினம் – வெள்ளிக்கிழமை
மே 25-ந்தேதி – ரம்ஜான் – திங்கட்கிழமை
ஆகஸ்டு 1-ந்தேதி – பக்ரீத் – சனிக்கிழமை
ஆகஸ்டு 11-ந்தேதி – கிருஷ்ண ஜெயந்தி – செவ்வாய்க்கிழமை
ஆகஸ்டு 15-ந்தேதி – சுதந்திர தினம் – சனிக்கிழமை
ஆகஸ்டு 22-ந்தேதி – விநாயகர் சதுர்த்தி – சனிக்கிழமை
ஆகஸ்டு 30-ந்தேதி – மொகரம் – ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 2-ந்தேதி – காந்தி ஜெயந்தி – வெள்ளிக்கிழமை
அக்டோபர் 25-ந்தேதி – ஆயுதபூஜை – ஞாயிற்றுக்கிழமை
அக்டோபர் 26-ந்தேதி – விஜயதசமி – திங்கட்கிழமை
அக்டோபர் 30-ந்தேதி – மிலாது நபி – வெள்ளிக்கிழமை
நவம்பர் 14-ந்தேதி – தீபாவளி – சனிக்கிழமை
டிசம்பர் 25-ந்தேதி – கிறிஸ்துமஸ் – வெள்ளிக்கிழமை
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.