நடிகர் விஜய் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அண்மையில் திருமண நிகழ்வொன்றில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஜய் சந்தித்தார். அந்தப் புகைப்படம் மற்றும் காணொலிகள் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இச்சந்திப்பு குறித்து இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது….

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இரகசியமாக வெளிநாடு செல்லவில்லை. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கடைசி ஆசையும் கூட தவிடுபொடியாகி விட்டது.

நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் வராது, அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். அமெரிக்கா ரஷ்யா அதிபர்களை திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response