காஷ்மீர் பற்றிப் பேசிய ரஜினி இவை பற்றிப் பேசுவாரா? – கிடுக்கிப்பிடி போடும் எம்.பி

காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது…..

தி.மு.க., காங்கிரசு கூட்டணியால் மட்டுமே தமிழகத்தின் உரிமைகளைப் பெற்றுத்தர முடியும்.

காஷ்மீரில் இணையதளம், செல்போன் உள்ளிட்ட தொலை தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாநிலத்தின் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியவில்லை. காஷ்மீர் மாநிலத்தில் நடந்ததுபோல் எந்த மாநிலத்தில் வேண்டுமானாலும் இனி நடக்கலாம். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாத மாநிலத்தில் இது நடக்கக்கூடும்

நடிகர் ரஜினிகாந்த் எனக்கு தனிப்பட்ட முறையில் நண்பர். நீட் தேர்வு, காவிரி பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் ரஜினிகாந்த் கருத்து கூற வேண்டும்.

அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வினருக்கு ஆதரவாக இருந்து தமிழகத்திற்கு விரோதமான அனைத்து மசோதாக்களுக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்கின்றனர். ஆனால் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கே ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. குறைவான தொகையை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்த முடியும். அந்த நிதியை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Response