
ஐபிஎல் 12 – விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான 46 ஆவது லீக் போட்டி இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்துள்ளது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 52 (37) ரன்கள், ஷிகர் தவான் 50 (37) ரன்கள் எடுத்தனர். மேலும் ரூதர்போர்டு ஆட்டமிழக்காமல் 28 (13) ரன்கள் எடுத்தார்.
பெங்களூர் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட் , உமேஷ் யாதவ், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து, பெங்களூர் அணி 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
பார்த்திவ் படேல் 39, விராட்கோலி 23, ஏபிடி வில்லியர்ஸ் 17, சிவம்துபே 24,மான்சிங் 27, ஸ்டோனிஸ் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள்.
பெங்களூரு அணி வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறியதால் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியடைந்தது.


