கொல்கத்தாவை சுருட்டிய சென்னை – 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 12 – ஏப்ரல் 9 இரவு எட்டு மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான 23 ஆவது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் கிறிஸ் லின் 0 ரன், சுனில் நரின் 6 ரன், தினேஷ் கார்த்திக் 19 ரன், ராபி உத்தப்பா 11 ரன், சுப்மான் கில் 9 ரன், நிதிஷ் ராணா 0 ரன், பியூஸ் சாவ்லா 8 ரன், குல்தீப் யாதவ் 0 ரன், பிரசித் கிருஷ்ணா 0 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 108 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஆந்த்ரே ரஸ்செல் 50 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணியில் சிறப்பாகப் பந்து வீசிய தீபக் சாஹர் 3 விக்கெட், ஹர்பஜன்சிங் 2 விக்கெட், இம்ரான் தாஹிர் 2 விக்கெட், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 17.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை (111 ரன்கள்) எட்டியது.

இதன் மூலம் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியில் அதிகபட்சமாக டு பிளிஸ்சிஸ் 43 ரன்கள், அம்பத்தி ராயுடு 21 ரன்கள், எடுத்தனர். கொல்கத்தா அணியில் சுனில் நரின் 2 விக்கெட், பியூஸ் சாவ்லா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Response