விஜயகாந்த் சரத்குமார் திடீர் சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறுவதற்காக தே.மு.தி.க. சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் சுமுக முடிவு எட்டப்படாமல் இழுத்துக்கொண்டேயிருக்கிறது.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் சென்னை சாலி கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் இல்லத்திற்கு இன்று சென்று அவரைச் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் விஜயகாந்தின் உடல்நலம் பற்றி சரத்குமார் விசாரித்துள்ளார் என கூறப்படுகிறது.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், விஜயகாந்தின் உடல்நலம் பற்றி விசாரிக்கவே வந்தேன். அவருடன் பழைய கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். அவரைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. அவர் மீண்டும் உடல்நலம் பெற்று வரவேண்டும் என கூறினார்.

அதிமுகவின் தூதராகவே சரத்குமார் விஜயகாந்தை சந்தித்தார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response