அதிமுகவின் இன்னொரு அணியாக இருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளரும் தேனி மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்செல்வன் தி.மு.கவில் இணையப்போவதாக இணையத்தில் தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன.
அதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் தங்க தமிழ்செல்வன்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் தி.மு.க-வில் சேர விருப்பமாக உள்ளதாக தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு வதந்தி பரப்பி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். சசிகலா ஆணைக்கிணங்க டிடிவி தினகரன் வழியில் என் பயணம் தொடரும். துரோகத்தை வீழ்த்தி எதிரியை வென்று கழகத்தையும் தமிழகத்தையும் மீட்போம் என்பது உறுதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல முதலில் வதந்தி என்று சொல்லிவிட்டு அதன்பின், அண்மையில் அந்தக்கட்சியிலிருந்து செந்தில்பாலாஜி திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.