சீமானை குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லை – மன்சூர்அலிகான் ஆவேசம்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
மற்றும் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதிகளில்
பனை விதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது

இந்நிகழ்வில் மன்சூர்அலிகான் தன் குடும்பத்தோடு பங்கேற்று பனை விதைகளை விதைத்தார்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்

பனைமரம் என்பது தமிழர்களின் மரபு சார்ந்தது
சவுதி உள்ளிட்ட பல நாடுகளில் பனைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள் இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனை சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்.

நாம்தமிழர் ஆட்சியில் இலட்சம் கோடி பனை விதைகள் விதைப்போம்.
இரண்டு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பனை விதைகளை நடுங்கள் இதுதான் தமிழகத்தின் நாளைய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும்.

தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் வேண்டுகோளின் படி நானே தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட ஏரிகளில் 2இலட்சம் பனை விதைகளை நட்டுள்ளேன்

இன்று இங்கு சத்திநாயக்கன் பாளையத்தில் அகன்ற பெரிய ஏரியில் ஊர்மக்கள் உதவியோடு நிகழ்வு நடந்துகொண்டிருக்கிறது.

இதை நாட்டு மக்கள் அனைவரும் கட்சி, சாதி,மதம் பார்க்காமல் அனைத்து ஊர்களிலும் பனை வளர்ப்பை முன்னெடுங்கள் பனைமரம் என்பது தமிழனின் மரம், வருமானத்தை ஈட்டக்கூடிய மரம், 113 ஆண்டுகள் வாழக்கூடியது. நடுவன் அரசும் தமிழக அரசும் தமிழக மக்களை சித்ரவதை செய்து மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடி வருகிறது, இங்கிருந்து இலங்கைக்கு அனுப்பும் பெட்ரோலின் விலை 32ரூபாய் ஆனால் சொந்த நாட்டு மக்களுக்கு 80 ரூபாய் இதுதான் மக்களாட்சியா?

ஹைட்ரோ கார்பன் போன்றவைகளால் தனியார் பெரு முதலாளிகள் ஊக்கப்படுத்தி கமிஷன் வாங்கிக்கொண்டு மக்களை சீரழிக்கிறார்கள் இதைக்கேட்கும் சீமானைக் குறை கூறுகிறார்கள்

சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை பொய் பேசுகிறார் என்கிறார்கள் அதற்குதான் வீடியோ ஆதாரம் இருக்கிறதே

தமிழ்நாட்டில் புலிக்கொடியையும் தலைவர் பிரபாகரன் படத்தையும் பயன்படுத்தமுடியாமல் இருந்தது இன்று அப்படியா இருக்கிறது

30நாடுகள் சேர்ந்து இந்தியாவின் துணையோடு பல இலட்சம் தமிழ் மக்களை அழித்தார்கள் அதற்காக இந்திய துணைக்கண்டம் வெட்கித் தலை குனிய வேண்டும் இது தெலுங்கனுக்கோ கன்னடனுக்கோ இல்லை மலையாளிக்கோ நடந்திருந்தால் இந்த நாடு என்ன பாடு பட்டிருக்கும் தமிழ்நாட்டு மக்களை போராடகூட விடாமல் அடக்குமுறை செய்த ஆட்சியாளர்கள் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை இதையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் சீமானை
எதற்காக குறை கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை,

அவரை காலம் தந்த அருட்கொடையாக ஏற்றுக்கொண்டு இன்று நானெல்லாம் விரும்பி வந்து சேவை செய்கிறேன்

தமிழ்நாட்டில் 50இலட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்து மக்கள் பணி செய்கிறார்கள் எங்கள் பக்க நியாயத்தையும் பாருங்கள் கட்சியில் யாரும் தண்ணி அடிக்கமாட்டார்கள் புகை பிடிக்க மாட்டார்கள் கொடி மற்றும் சீமான் படங்களை தலையில் வைத்துக்கொண்டு ஆடமாட்டார்கள் பட்டாசு வெடிக்கமாட்டார்கள் சால்வை போடமாட்டார்கள்

ஆனால் இங்கு அப்படியா?

இப்போது சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்தது 2மணி நேரங்களுக்கு மேலாக நின்று கொண்டிருந்தோம் திண்டிவனம் வரை போக்குவரத்து நெரிசல் அங்கபோய் என்ன சாதித்தார்கள் எல்லோரையும் பல் துலக்காமல் குளிக்காமல் ஆம்னி பேருந்துகளில் அள்ளிப்போட்டுக்கொண்டு சாராய வாடையோடு போகிறார்கள் இதுதான் மாநாடா எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடினால் நீங்கள் ஓட்டு வாங்கி விடுவீர்களா

இதையெல்லாம் மக்களாகிய நீங்கள் தான் பார்த்து உங்கள் வாக்குகளை ஆயுதங்களாக பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை கொண்டு வரவேண்டும்

அதுமட்டுமல்லாமல் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உழைக்கும் நாம்தமிழர் கட்சியோடு இணைந்து நாமெல்லாம் தமிழர்கள் எந்த சாதியாகவும் மதமாகவும் எங்களைப் பிரிக்க முடியாது நாம்தமிழர் நாமே தமிழர் என்று உலகிற்கு உரக்கச்சொல்லுவோம் என்று முடித்தார் மன்சூர்.

Leave a Response