தமிழகமெங்கும் 3 இலட்சம் பனைவிதைகள் – அசத்திய நாம்தமிழர்கட்சி

2016 சட்டமன்றத் தேர்தலின் போது நாம்தமிழர் கட்சியின் சார்பில் செயல்பாட்டு வரைவு வெளியிடப்பட்டு அதில் “பலகோடி பனைத்திட்டம்” என்கிற திட்டத்தின் மூலம் இருக்கும் பனைமரங்களைப் பாதுகாப்பது, புதிய பனைமரங்களை வளர்த்தெடுப்பது என்ற திட்டம் வகுக்கப்பட்டது.

ஊர் தோறும் இருக்கும் நீர் நிலைகளைச் சுற்றிப் பனை மரங்களை நட்டு வளர்க்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் வெளிப்பாடாக 23.09.2018 அன்று நாம்தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது

இதில் காஞ்சிபுரம் மாவட்டம் நெடுங்குன்றத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பனைவிதையை நட்டு நிகழ்வைத் துவக்கி வைத்தார்

அதனைத் தொடர்ந்து தமிழத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பான முறையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது இது பற்றி ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் அ.தமிழ்ச்செல்வன் கூறுகையில்…

தமிழினத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிடம் போர்நடந்து இவ்வளவு அழிவுகளுக்குப் பிறகு நீங்கள் தமிழீழ நாடடைந்து உங்கள் பொருளாதாரத்தை எப்படி மீட்டெடுக்க போகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது

பனைமரங்களும் இறால்களும் இருந்தால் மட்டும் போதும் எங்கள் நாட்டுடைய பொருளாதாரத்தை உயர்த்திக்காட்டுவேன் என்று கூறினார் எங்கள் தலைவர் வாக்குப்படியும்,

பனைமரங்களை பாதுகாப்பது மற்றும் பனை விதைகள் நடுவது என்பது எங்கள் கட்சியின் கொள்கைகளில் ஒன்றாக உள்ளதாலும்

அதுவும் குறிப்பாக

ஆனி ஆடி ஆவணி மாதங்களில் பனம்பழங்கள் தானாக உதிரும் காலமாக இருப்பதாலும் எங்கள் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுப்பில்

எங்கள் தொகுதியான ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 3000பனைவிதைகள் விதைத்துள்ளோம்.

மேலும் தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதில் சுமார் மூன்று லட்சங்களுக்கும் மேலான விதைகள் நடப்பட்டுள்ளது இந்நிகழ்வு இன்றோடுமட்டுமல்லாது அடுத்தடுத்த வார ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெறும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

Leave a Response