மெரினாவில் இடம் ஒதுக்க பாஜக பேரம்? ஸ்டாலின் பணிந்தாரா?

தமிழகத்தின் முதுபெரும் தலைவர் கலைஞர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய,மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா நினைவிடம் அருகே இடம் கேட்டது திமுக.

மு.க;ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகியோர் குடும்பமாகச் சென்று தமிழக முதல்வரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தும் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இது தமிழக அரசோ எடப்பாடிபழனிசாமியோ எடுத்த முடிவல்ல, மத்திய அரசின் முடிவு என்றும் அதனால்தான் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மூலம் அண்ணா நினைவிடம் அருகே இடம் கொடுக்கமுடியாது என்கிற அறிக்கை வெளியானது என்றும் சொல்கிறார்கள்.

அதற்குக் காரணமாகச் சட்டச்சிக்கல்கள் சொல்லப்பட்டது.

அதனால் இரவோடிரவாக பாமக சார்பில் போடப்பட்ட வழக்கு, டிராபிக் ராமசாமி போட்டிருந்த வழக்கு உட்பட பல வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

இதை மத்திய அரசு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.

அதன்பின்ன்ர், காமராசருக்கு இடம் கொடுக்கவில்லை ஜானகி எம்ஜிஆருக்கு இடம் கொடுக்கவில்லை போன்ற தவறான வாதங்களை எடுத்து வைத்தனர். ஆனால் அவற்றிற்கு உரிய ஆதாரங்களைக் கொடுக்க முடியவில்லையாம்.

இதனால் கோபமான நீதிபதிகள், ஆதாரத்தோடு எதையும் சொல்லுங்கள் என்று சொன்னதோடு , ஜெயலலிதாவுக்கும் இதே அணுகுமுறையை இந்த அரசு கடைபிடித்ததா? என்றும் கேட்டனராம்.

இவற்றிற்கு அரசுத்தரப்பில் பதில் இல்லை. இதனால் மெரினாவில் இடம் ஒதுக்கி நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர் என்று சொல்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி பாஜக அணியில் இணைய திமுகவை வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

அதனால்தான் முதலில் காலை எட்டு மணி என்று சொல்லப்பட்ட பிரதமர் மோடியின் வருகை பதினோரு மணியாக மாறியது என்றும் சொல்கிறார்கள்.

கலைஞரின் உடலை வைத்துக்கொண்டு பாஜக பேரம் பேசியதா? அதற்கு மு.க.ஸ்டாலின் உடன்பட்டாரா? பாஜகவின் அதிகாரத்தால் இடம் கிடைத்ததா? திமுகவின் சட்டப்போராட்டத்தால் இடம் கிடைத்ததா? போன்ற கேள்விகளுக்கான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Response