பூந்தமல்லி அருகே உள்ள ஒரு தனியார் இடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இந்தப் படப்பிடிப்பில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களாம்.
தமிழகத்தின் ஃபெப்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுகிறார்களாம்.
இதற்கு ஃபெப்சி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் கூடிய அவ்வமைப்பினர் தமிழக தொழிலாளர்களைப் பயன்படுத்தப்படுத்தக் கோரினர்.
இக்கோரிக்கையை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான கமல்ஹாசனிடமும் சொல்லியிருக்கிறார்கள்.
கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் போராட்டம் நடக்கும் என்றும் நிகழ்ச்சி நடத்தும் தனியார் தொலைக்காட்சிக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்றும் தொழிலாளர்கள் சொல்கின்றனர்.