8 வழி சாலை அமைப்பதில் எடப்பாடி பிடிவாதமாக இருப்பது இதனால்தான்

25.2.2018 அன்று, மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை திட்டம் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திட்டம் 277.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த பசுமை வழிச்சாலை 8 வழிச்சாலையாக, சென்னை அருகிலுள்ள தாம்பரம் முதல் சேலம் நகரம் அரியானூர் வரையில், காஞ்சீபுரத்தில் 59.1 கி.மீ., திருவண்ணாமலையில் 123.9 கி.மீ., கிருஷ்ணகிரியில் 2 கி.மீ., தர்மபுரியில் 56 கி.மீ., மற்றும் சேலத்தில் 36.3 கி.மீ., என்று இம்மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளன.

சுமார் 10,000 ஏக்கர் நிலத்தை அழித்து, 7 ஆறு 8 மலைகளைச் சிதைத்து, 20,000 மரங்களை வெட்டி, ஆயிரக்கணக்கான நீர் நிலைகளை அழித்து, கொண்டு வரப்படுகிற 8 வழிச்சாலை திட்டத்துக்குக் கடும் எதிர்ப்புகள் வந்துள்ளன.

ஆனால், ஜூன் 11 அன்று சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர், பொதுமக்களும், அமைப்புகளும், எதிர்ப்பினை கைவிட்டு, திட்டத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த திட்டம் அமைக்கப்பட்டே தீரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பிக்கிடையிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பாக இருக்கக் காரணம் இதுதான்…

சேலம் To சென்னை விமான சேவை தொடக்கம் ஏன் தெரியுமா?

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,சென்னை – சேலம்
இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமைய விருப்பாதாக அறிவித்துள்ளார்,

இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய், தமிழ் நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத, மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க
பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?

அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்
அமையவிருக்கும் சாலையானது.

கார்ப்பரேட் நிறுவனமான
ஜிண்டாலுக்காக.( Jindal steel)
ஆம்,ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக
தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,

ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை புதிய திட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.

அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள
கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது.

இரண்டாவது திருவண்ணாமலை மாவட்டம்
கல்வராயன்மலையில் இருந்து இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது, இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும்
இரும்புத்தாது வளங்களை வெளிநாடுகளுக்கு அதி விரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் சென்னை துறைமுகத்துக்குகொண்டுச் செல்ல வேண்டும்.

அதற்காகத்தான் மலைகளின்
ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள். அது தான் இந்த சென்னை- சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமைச் சாலை.

இந்த சாலையின் மூலமாக சேலம் – சென்னைக்கு இடையிலான பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும்.

நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது. இதற்கு #தமிழக அரசும் உடந்தை. தயவு செய்து தமிழ் செய்தித்தாள்களை தவிர்த்து கூடுமானவரை ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள், எப்படி அழியப்போகிறோம் என்பதாவது புரியும்.

தொடர்ந்து வரும் ஆபத்துகள்?
தப்புமா தமிழகம்! உயிர்வாழ எங்கே செல்வார்கள் தமிழர்கள்?

சேலத்தில் ஏன் விமான நிலையம் இப்போது தொடங்கப்பட்டது. இவையனைத்தும் இந்தப் பதிவில்…

மூன்று மாதத்திற்கு ஒரு செயற்கைக் கோள் யாருக்காக இஸ்ரோ அனுப்புகிறது?

மிகச்சரியான இடத்தில் எப்படி மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பிளாட்டினம் திட்டங்கள் தொடங்கப்படுகிறது.

இந்தியாவிலேயே ஏன் உலக அளவில் அதிக அளவு பிளாட்டினம் நமது நாமக்கல் மற்றும் கோவை மாவட்டத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கோவை, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல் மாவட்டங்கள் தான் அடுத்த இலக்கு.

குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியில் 27 சதுர கிலோமீட்டர் அளவிலும் மேட்டுப்பாளையத்தில் 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பிளாட்டினத்தாதுக்கள் உள்ளதாக, இந்திய புவியியல் ஆய்வுத்துறை இஸ்ரோவின் உதவியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து தமிழக கனிம வளத்துறையுடன் (TAMIN) இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டது.

மிகக்குறைவாக 30 மீட்டர் ஆழத்திலேயே தாதுக்கள் அதிக அளவாக கிடைத்த நிலையில், 500 மீட்டர் ஆழத்தில் அதிக அளவிலான பிளாட்டின் தாதுக்கள் கிடைப்பது உறுதி என நம்புகிறார்கள்.

இதில் சத்தம்பூண்டியில் கிடைக்கப்பெற்ற பிளாட்டின் தாதுக்கள் 2500 முதல் 2700 மில்லியன் ஆண்டுகள் பழமையான மதிப்பு மிக்கதாகும் பிளாட்டினத் தாதுக்கள் உள்ள பகுதிகளில் கூடிய விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.

கொங்கு மண்டலமும் கொலையாகப் போகிறது
தற்காத்து தப்பி பிழைத்திடு எம் தமிழினமே!

– நாடோடித் தமிழன்

Leave a Response