ஐபிஎல் – பஞ்சாப்பை பந்தாடியது கொல்கத்தா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தூர் ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பலப்பரீட்சை செய்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி தலைவர் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்க வீரர்கள் கிறிஸ் லின் – சுனில் நரேன் ஜோடி கொல்கத்தா பந்து வீச்சை பதம் பார்த்தனர்.

குறிப்பாக சுனில் நரேன் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த ஜோடி 53 ரன்கள் எடுத்திருந்த போது பிரிந்தது. இதனையடுத்து உத்தப்பாவுடன் ஜோடி சேர்ந்த நரேன் அரைசதம் அடித்து அசத்தினார். நரேன் 36 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல் அதிரடியில் இறங்க 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 214 ரன்கள் மட்டும் எடுத்து, 8 விக்கெட்டுகளை இழந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வி அடைந்தது.

Leave a Response