ஐபிஎல் – பந்துவீச்சில் டெல்லியை சிதறடித்த பஞ்சாப்

11-வது ஐபிஎல் போட்டித்தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் ஏப்ரல் 23 அன்று மோதின.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.

இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் வியக்கத்தக்க வகையில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டு இருந்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும் கே.எல். ராகுலும் களம் இறங்கினர்.

இந்த ஜோடி, பஞ்சாப் அணியின் வழக்கமான அதிரடியை வெளிக்காட்ட தடுமாறியது. பிஞ்ச் 2, கே.எல்.ராகுல் 21, மயங்க் அகர்வால் 21 , என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கருண் நாயர் (34 ஓட்டங்கள் எடுத்தார்.

யுவராஜ்சிங் (14 ஓட்டங்கள்) ஏமாற்றம் அளித்தார். டேவிட் மில்லர் 26 ஓட்டங்களில் வெளியேறினார். அணித்தலைவர் அஷ்வின் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ஓட்டங்கள் சேர்த்தது.

இதையடுத்து, 144 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடத் தொடங்கியது.

இந்நிலையில் பஞ்சாப் அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சால் டெல்லி அணியினர் ஆரம்பம் முதலே திணறினர்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

Leave a Response