வைகோவும் சீமானும் இந்த நேரத்தில் இப்படிச் செய்யலாமா?

அண்மையில் சீமான் பற்றி வைகோ தெரிவித்த கருத்துகளால் சர்ச்சை உருவானது.

இதன் காரணமாக மதிமுக மற்றும் நாம்தமிழர்கட்சியினரிடையே அங்கங்கே மோதல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது. சில இடங்களில் மோதலும் நடக்கின்றன.

சமூகவலைதளங்களில் இரு கட்சியினருக்கும் இடையே கட்மையான மோதல்கள் நடக்கின்றன.

இந்நிலையில்,வைகோ சீமான் ஆகிய இருவருக்கும், தமிழக மக்கள் முன்னணி சார்பில் பொழிலன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில்,

நாம் தமிழர் கட்சியினரும், ம.தி.மு.க.வும் இப்படியாக இழிவுபட இந்தநேரத்தில் ஏசுவது தமிழின உரிமைப் போராட்டங்களையே சிதைப்பதாகும்.

தமிழர் உரிமைப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிற இச்சூழலில் எல்லா இயக்கங்களும், கட்சிகளும் இந்திய அரசை, பா.ஜ.க.வை எதிர்மைப்படுத்தியே இயங்க வேண்டும்.

தமிழ் இயக்கங்கள், தமிழ்த்தேச இயக்கங்கள், திராவிட இயக்கங்கள் தங்களுக்குள்ளிருக்கும் முரண்களை, கடந்த காலத் தவறுகளைச் சுட்டித் தூற்றிக் கொண்டிருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அப்படியாக இல்லாமல் முரண்களையே பேசுவோர் தமிழகத்தின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்றே நாம் அவர்களை அடையாளப்படுத்தித் தனிமைப்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Response