சந்தோஷத்தில் வில்லன் நடிகர்..!


சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘அறம்’ திரைப்படத்தில், குழிக்குள் விழுந்த குழந்தையின் தந்தையாக நடித்த ராம்ஸ் என்கிற ராமச்சந்திரனின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது. நான் மகான் அல்லபடத்தை தொடர்ந்து பல படங்களில் விளனாக நடித்த இவரை ‘அறம்’ படம் குணச்சித்திர நடிகராக பாதை மாற்றி விட்டுள்ளது.

“’அறம்’ படத்தின் கதையை படிக்க சொல்லி என்னிடம் கொடுத்தார் கோபி நயினார். படிக்கும் போதே நான் செய்த கதாபாத்திரம் என்னை வெகுவாக கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்தை நான் தான் செய்ய போகிறேன் என்பது அப்பொழுது கூட எனக்கு தெரியாது. எனக்கு இவ்வளவு பெயர் வர காரணமாக இருந்த இந்த கதாபாத்திரத்தை தந்த அவருக்கு நான் வாழ் நாள் முழுக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

படப்பிடிப்பு நடந்த இடமும், காலமும் மிக கடுமையானது. இன்று எங்கு போனாலும் எல்லோராலும் பாராட்டப்படும் இந்த கதாபாத்திரம் கிடைத்தமைக்கு நான் நிச்சயமாக கொடுத்து வைத்து இருக்க வேண்டும்” என்கிறார் ராமச்சந்திரன்.

Leave a Response