அறம் நயன்தாராவுக்கு மதிவதனி பெயர் வைத்தது ஏன்? – இயக்குநர் கோபி விளக்கம்

அறம் போற்றும் எங்கள் மதிவதனி.

இயக்குநர் கரு.பழனியப்பனும் அறம் இயக்குநர் கோபி இருவருமே சிறந்த பேச்சாளர்கள் என்பதை முன்பே அறிவேன்.
காரணம் இருவரும் பல தொலைக்காட்சி விவாதங்களில் வந்திருக்கிறார்கள். சிறப்பாகப் பேசி பார்ப்பவர்களை தங்கள் கருத்துகளால் ஈர்ப்பவர்கள்.

இன்று நியூஸ் பதினெட்டில் இருவரும் ஒன்றாக வந்து பேசியதும் அறம் குறித்த தீர்க்கமான பேச்சுகளும் உண்மையில் மிக மிகச் சிறப்பு.

மதிவதனி என்ற பெயரை ஏன் அந்த முக்கியமான கலெக்டர் கதாபாத்திரத்துக்குத் தேர்ந்தெடுத்தீர்கள்? என்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் கேள்விக்கு கோபியின் பதில் செம்ம.

ஆம் மிகப் பெரிய தியாகம் செய்த ஒருவரின் பெயரையோ அல்லது மிகப் பெரிய தியாகம் செய்தவருக்குத் துணையாக இருந்தவரின் பெயரையோ பெருமைப்படுத்த வேண்டும்.

மட்டுமல்லாது அந்த வரலாற்றையும் அந்தப் பெயருக்கான மகத்துவத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்ற நோக்கமும் பொறுப்பும் இருப்பதால் தான் மதிவதனி என்ற பெயரை வைத்தேன் என்று கோபி சொன்னது அடி தூள் ரகம்.

மதிவதனின்னா சும்மாவா. வன்னிக்காட்டின் வரிப்புலியாம் எங்கள் தாய்ப் புலி வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீர தீர செயல்களுக்கு உற்ற துணையாய் இறுதி வரை களத்தில் நின்ற எங்கள் பெண்புலி ஆச்சே.

– ஆன்டனி வளன்

Leave a Response