
பி வி பி சினிமாஸ் திரை உலகில் தங்களுடைய ஆளுமையை மேலும் மேலும் உறுதி படுத்தி வருகிறார்கள். பிரமிப்பு ஊட்டும் பிரம்மாண்டமான படங்களை வரிசையாக தயாரித்து வழுங்குவதன் மூலம் திரைப்பட வர்த்தகத்தில் பெரிதான ஒரு மாற்றத்தை தருவதில் முனைப்போடு இருக்கிறார்கள்.இன்று15 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்று சென்னையில் ஒரு எளிமையான பூஜை மூலம் தங்களது அடுத்த படைப்பை துவக்கினர்.
——————————————————————-
சென்னையிலும், ஹைதராபாத்திலும்இயங்கிவரும்பெரியநிறுவனமானபிக்சர்ஹவுஸ்மீடியாலிமிட்டட் (PVP Cinema)செல்விஸ்ருதிஹாசன்மீதுக்ரிமினல்&சிவில்(Criminal & Civil) வழக்குபதிவுசெய்துள்ளது. இந்நிறுவனம்மிகப்பெரியபொருட்செலவில்தமிழ், தெலுங்குஆகியஇரண்டுமொழியில்தயாரிக்கும்திரு.கார்த்திக், திரு.நாகர்ஜுனாநடிக்கும்,
திரு.வம்சிஇயக்கும்படத்தில்நடிப்பதாக
ஒப்பந்தம்அளித்தார். இவருடையஒப்பந்ததேதிபடிமற்றநடிக்ர்களிடமும்
ஒப்பந்தம்வாங்கியிருந்தோம். இந்தஒப்பந்தத்தின்படிபாதிபடம்முடிவடைந்தநிலையில்
தன்னால்இப்படத்திற்குகொடுக்கதேதிஇல்லை,அதனால்தன்னால்நடிக்கஇயலாதுஎன்று
ஒருமின்னஞ்சல்(E-Mail)அணுப்பியுள்ளார். எனவே, எங்களுக்குமற்றநடிகர்களிடம்வாங்கியஒப்பந்ததேதிகளும்
வீணாகிவிட்டது. இவருடையஇந்தசெயலால்எங்களுடைய
பணம்இழப்புமட்டுமில்லாமல், எங்கள்நிறுவனத்திற்குஉண்டானநன்மதிப்பும்
இழக்கப்பட்டுள்ளது.
——————————————————————-
முதலில் உள்ள செய்தி பிவிபி நிறுவனத்தின் சார்பில் மார்ச் 15 ஆம் தேதி அனுப்பப்பட்டதன் ஒரு பகுதி, இரண்டாவதாக உள்ளது மார்ச் 27 ஆம் தேதி அந்நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்ட செய்தியின் ஒரு பகுதி,
இந்தச் செய்திகளின்படி மார்ச் 15 இல் தொடங்கிய படம் மார்ச் 27 க்குள் பாதிப்படம் முடிவடைந்துவிட்டது என்று தெரிகிறது. இது உண்மையா? என்கிற கேள்வி எழுகிறது. நாகார்ஜுனா கார்த்தி போன்ற நடிகர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 12 நாட்களுக்குள் பாதி முடிவடைந்து விடுமா? சாத்தியமே இல்லை என்பது எதார்த்தம்.
அப்படியானால் பிவிபி நிறுவனம் பொய் சொல்லுகிறதா?
ஏற்கெனவே விஸ்வரூபம் சமயத்தில் கமலுக்கு எதிராகச் செயல்பட்டது இந்த நிறுவனம். அவர் நாட்டை விட்டே போகிறேன் என்று சொல்லுமளவுக்குக் கொண்டு சென்றது இந்த நிறுவனம்தான் என்று சொல்கிறார்கள். இப்போது அவர் மகள் மீது வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். இப்போதும் அவர் மீதான கோபத்தில் அவரைப் பழிவாங்க இப்படி ஒரு வழக்குப் போடப்பட்டிருக்கிறதா? என்கிற சந்தேகம் தமிழ்த்திரையுலகில் எழுந்திருக்கிறது.
தமிழகத்தைவிட ஆந்திராவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம். இந்தச் சூழலில் உத்தமவில்லன் படத்தின் தெலுங்குப் பாடல்கள் வெளியீட்டுவிழா நடக்கவிருக்கிறது. அதில் இதுபற்றிக் கமல் பேசுவாரா? என்கிற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.


