எம்ஜிஆர் வாழ்க்கை திரைப்படமாகிறது

மருதூர்கோபாலமேனன் இராமச்சந்திரன் எனும் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா இப்போது. இவ்வாண்டில் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

காமராஜ் The Kingmaker, முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது.

எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை, அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர் சினிமா நடிப்பு மட்டுமின்றி பல்துறை வல்லுனராக இருந்தார். அவை மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது.

ஏழை எளிய மக்களின் கதாநாயகராக, மக்கள் திலகமாக விளங்கி வரும் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றுத் திரைப்படம் அவரின் நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்.

நவம்பர் 8, புதன்கிழமை படப்பிடிப்பை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைக்கிறார்கள், விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள் என்று ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் படத்தைத் தயாரிக்கும் அ.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

படத்தில் எம்ஜிஆராக நடிக்கப்போவது யார் என்பது படப்பிடிப்பு தொடங்கும் நாளில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

Leave a Response