நல்லவரைக் கெட்டவராகக் காட்டும் படம், சரித்திரம்பேசு

அய்யனார் பிலிம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “சரித்திரம்பேசு”.மருத்துவர் சரவணன் இந்தப் படத்தில் வில்லத்தனமான கதாநாயகனாக  நடிக்கிறார். கிருபா –  கன்னிகா இருவரும் அறிமுகமாகிறார்கள்.தயாரிப்பாளர் யோகேஸ்வரன் போஸ்  இன்னொரு நாயகனாக நடிக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீ மகேஷ்.
படம் பற்றி இயக்குனர் ஸ்ரீமகேஷிடம் கேட்டோம்…
நான் ஏற்கனவே சரத்குமாரை வைத்து சத்ரபதி படத்தை இயக்கினேன். சரித்திரம் பேசு வேறு விதமான கமர்ஷியல் கதை! இந்த படத்தில் கௌரவத்திற்காக கொலை செய்கிற கொடூரமான வில்லன் வேடத்தில் டாக்டர் சரவணனை நடிக்க வைத்தது எனக்குள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் டாக்டர் சரவணனை நிழலில் வில்லனாக காட்டுகிறோம் என்று.
இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உடல் நலம் பாதிக்கப் பட்ட போது சென்னையில் இருந்து மதுரைக்கு ஆம்புலன்ஸ் மூலம் என்னை அழைத்து சென்று உயிர் பிழைக்க வைத்தார். அந்த ஆஸ்பத்திரியில் நான் இருந்த போதுதான் என்னை போன்று நிறைய பேருக்கு இலவசமாக ஆபரேசன் செய்து உயிர் பிழைக்க வைக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அத்துடன் சிகிச்சைக்கு உள்ள நோயாளிகளின் குடும்பத்தினர் யார் எத்தனை பேர் வந்தாலும் அங்கேயே தங்கிக்கொள்ளலாம். தடுப்பதில்லை..நிறையப் பேரின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அவரைக் கொடூர வில்லனாகக் காட்டி இருக்கிறேன். விரைவில் படம் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர் ஸ்ரீமகேஷ்.
இந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் கலைப்புலிதாணு, இயக்குனர் பேரரசு. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Response