‘ஜுங்கா’வுக்காக பாரிஸில் முகாமிட்ட விஜய்சேதுபதி..!


நான்கு வருடங்களுக்கு முன்பு, கோகுல் இயக்கத்தில், விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இப்படத்தில் இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார் மூஞ்சி குமார்’ ஆக பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.

இப்போது மீண்டும் இந்த கூட்டணி தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில் கைகோர்த்துள்ளது. முந்தைய படம் போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சமீபத்தில் பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது.

‘வனமகன்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகஅறிமுகமான சாயிஷா சாய்கல் ‘ஜுங்கா’ படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யோகி பாபு உட்பட பல நட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில் நடிக்கிறார்கள்

இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ள படங்களிலேயே மிகப்பிரம்மாண்டமான படமாக உருவாகவுள்ளது ‘ஜுங்கா’ திரைப்படம். இப்படத்தை விஜய்சேதுபதியே தன்னுடைய சொந்த பேனரில் தயாரிப்பதால், படம் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே இப்படம் சம்பந்தப்பட்ட வியாபாரம் முடிந்துவிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது

Leave a Response