
சரத்குமாரை வைத்து வைத்தீஸ்வரன் படத்தை இயக்கியவர இயக்குனர் வித்யாதரன்.. இவர் தற்போது ‘இட்லி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு மனோபாலா, தேவதர்ஷினி, வெண்ணிறடை மூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வயதான மூன்று பாட்டிகள்தான் ஹீரோ. அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் கதை. சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, கல்பனா ஆகிய மூவரும் தான் அந்த பாட்டிகள். மற்றபடி படத்தில் பாடல்கள், அக்சன் காட்சிகள் என்று எதுவும் கிடையாது. இதுதான் இட்லி படத்தின் ஸ்பெஷல். இது அனைவரையும் சிரிக்க வைக்கும் சிந்திக்க வைக்கும் படமாக இருக்கும்.
திட்டமிட்டப்படி 29 நாட்களில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் வித்யாதரன். அப்பு மூவீஸ் அப்பாஸ் தூயவன் தயாரித்துள்ள இத்திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதன் டீசரை சற்றுமுன் நடிகர் கார்த்தி வெளியிட்டார்.


