தமிழ்ப்பகுதிகளில் சிங்கள ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் – சிங்கள அரசின் அடுத்த கொடூரம்

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் பல்வேறு பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் சிங்கள ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு கொழும்பில் சிங்கள அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்தத் தகவலை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் சிங்கள அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், 30 வருட யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. அதிலும் சிங்கள ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை அதிகமாகவுள்ளது.

இதற்குத் தீர்வாக வடமாகாணத்திலுள்ள சிங்களப் பாடசாலைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்களுள், பூரண தகுதியுடைய ஆசிரியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்கும் யோசனையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்தார்.அதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழ்ப்பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்து அங்கு சிங்களப்பள்ளிகளை மேம்படுத்தும் திட்டத்துடன் சிங்கள அரசு செயல்படுகிறது.

தமிழ்ப்பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் குறைபாடுகள் இருப்பதைக் கருத்திலேயே கொள்ளாமல், சிங்கள ஆசிரியர்களை நியமிக்கும் வேலைகளை தொடங்கியுள்ளதற்குத் தமிழ்மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. அதற்கென்ன மதிப்பு இருக்கிறது?

Leave a Response