ஓவியாவின் புதிய ஹேர் ஸ்டைலுக்கு இவ்வளவு வரவேற்பா?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை ஓவியாவின் புதிய முடியலங்காரப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து மன அழுத்தம் காரணமாக தற்கொலை வரை சென்று பின்பு, அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இதையடுத்து, சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட ஓவியா சிட்டி சென்டர் சென்ற பொழுது அவருடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர்.

அப்போது, காதல் பற்றி ரசிகர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆம், உண்மை தான் நான் இன்னும் ஆரவ்வை காதலிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர், சென்னையிலிருந்து விமானம் மூலம் கேரளா சென்றுள்ள அவர், தனது தந்தையிடம் கூறிவிட்டு நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆண்களைப் போன்று தன்னுடைய ஹேர்-ஸ்டைலை மாற்றியுள்ளார். அதோடு, ரசிகர் ஒருவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் தான் ஹீரோயின்கள் படத்தில் இது போன்று வித்தியாசமான ஹேர் ஸ்டைல் கொண்டிருப்பார்கள். தற்போது, ஹாலிவுட் ஸ்டைலுக்கு ஓவியா மாறி இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, காதல் தோல்வியிலிருந்து மீண்டு வரும் ஓவியாவின் புதிய ஸ்டைல் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைவிட ஓவியா பற்றிய செய்திகள் அதிக வரவேற்பைப் பெற்றுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response