இயக்குனர் கண்ணனுக்கு ‘இவன் தந்திரன்’ தந்த ஆறுதலும் ஆசுவாசமும்..!


இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் கண்ணன் மற்றும் ராம்பிரசாத் இணைந்து தயாரித்த இப்படத்தை தனஞ்ஜெயன் வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஜிஎஸ்டி வரி போக, தமிழக அரசு நகராட்சி வரியும் சேர்த்திருப்பதால் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய போராட்டத்தால் இப்படத்துக்குப் பாதிப்பு உண்டானது. தற்போது போராட்டம் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உறுதியாகியுள்ளது. அதனையும் இயக்குநர் கண்ணனே இயக்கவுள்ளார். ரீமேக்கிற்கான நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் தெலுங்கு ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

ஒரு தயாரிப்பாளராக மிகப்பெரிய தொகையை இந்தப்படத்தில் முதலீடு செய்திருந்த இயக்குனர் கண்ணன், ஸ்ட்ரைக்கால் அதிர்ச்சியடைந்து இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் படம் திரையிடப்பட்டு படம் நன்றாக ஓடுவது அவருக்கு ஆறுதலையும் தெலுங்கிலும் இதை ரீமேக் செய்யும் வாய்ப்பு ஆசுவாசத்தையும் கொடுத்துள்ளது.

Leave a Response