தலைநகரில் தேசிய விருதுபெற்ற தமிழ்சினிமா..!


புதுடில்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது. தொடர்ந்து ஜோக்கர் படத்தில் ஜாஸ் மீனு என்ற பாடல் பாடியதற்காக சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார்.

மேலும் பாடலாசிரியர் வைரமுத்து தர்மதுரை படத்தில் இடம் பெற்றுள் எந்த பக்கம் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசரியர் விருது பெற்றார். இவர் தேசிய விருது பெறுவது 7-வது முறையாகும். சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு, இயக்கிய இயக்குனர் ராஜூமுருகனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

சூர்யா நடித்த 24 படத்தின் ஒளிப்பதிவு மற்றும் தயாரிப்பு வடிவமைப்புக்காகவும் விருது வழங்கப்பட்டது… விமர்சகருக்கான விருது தனஞ்செயனுக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு படமான ஜனதா கேரஜ் படத்தில் சிறந்த நடனம் அமைத்ததற்காக சிறந்த நடன இயக்குனராக ராஜூ சு்நதரம் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டது. .

Leave a Response