கெளதம்கார்த்திக்கின் நம்பிக்கைக்குரிய படம்

2013 ஆம் ஆண்டு வெளியான கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் கெளதம் கார்த்திக். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார்.

அவர் நடித்த முத்துராமலிங்கம் என்ற படத்தில் அவருடன் அவருடைய அப்பா கார்த்திக்கும் நடிப்பதாக இருந்தது. அப்போது அது நடக்கவில்லை. இப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கின்றனர்.

இயக்குநர் திரு எழுதி இயக்கவிருக்கும் புதிய படமொன்றில் கார்த்திக்கும் கெளதம்கார்த்திக்கும் அப்பா – மகனாக நடிக்கவிருக்கிறார்கள்.

திரு இயக்கும் இந்தப் படத்தை, மோசர்பேர், யுடிவி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிய தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இந்தப்படத்தில் கார்த்திக் அரசு அதிகாரியாகவும், கெளதம் கார்த்திக் பாக்ஸராகவும் நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.

திரு இதுவரை இயக்கிய படங்கள் வழக்கத்திலிருந்து மாறுபட்டவை. தயாரிப்பாளர் தனஞ்செயன் கதைத்தேர்வில் வல்லவர் என்று சொல்வார்கள். இவ்விருவரும் இணைந்திருக்கும் இப்படம் கவனிக்கத்தக்க படமாக இருக்கும் என்று நம்பலாம்.

Leave a Response