ஏ.ஆர்.ரஹ்மான் ‘ரோஜா’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அப்படம் 1992 இல் வெளியானது. இவ்வாண்டோடு அவர் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆகின்றன. திரையுலகில் 25 வருடங்கள் இசையமைத்ததை அடுத்து இலண்டனில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை ஜூலை 8 ஆம் தேதி நடத்தினார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நேற்று இன்று நாளை’ என்ற பெயரை கொண்ட இந்த இசை நிகழ்ச்சி வரும் ஜூலை 8ஆம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலும் உள்ள ரஹ்மான் ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே ஏராளமான ரசிகர்கள் கல்ந்துகொண்டனர்.
கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப்பயணம் உண்மையிலேயே மறக்கமுடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப்பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான். என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம்தருகிறது’ என்று கூறிய ஏ.ஆர்.ரஹ்மான், ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் இலண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
பென்னி தயால், நீதி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் ஏற்கெனவே கூறியிருந்தபடி ரோஜா முதல் காற்றுவெளியிடை வரையிலான படங்களில் இருந்து பாடல்களை இசைத்திருக்கிறார்.
அதனால் ட்விட்ட்ரில், ஏ ஆர் ரகுமானுக்கு எதிராக வட நாட்டுக்காரர்கள் ட்வீட் செய்கின்றனர்.இலண்டன் இசை நிகழ்ச்சியில் இந்திப் பாட்டு பாடவில்லை தமிழ்ப் பாட்டு மட்டும் பாடினார் என்பது அவர்கள் குற்றச்சாட்டு. ட்விட்ட்ரில் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரமாக இயங்கினாலும் இதுகுறித்து எந்த எதிர்வினையும் செய்யவில்லை. அவர் வழக்கம்போல எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லிப் புன்னகைத்திருக்கக்கூடும்.