இதுவரை இல்லாதவகையில் ஓரணியில் அருந்ததியர்களும் கொங்குவேளாளர்களும்

பிப்ரவரி 7 ஆம் தேதி கொங்குநாடு ஜனநாயக கட்சியின் கோவை இறையருள் தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் அவர்களை சந்தித்துப் பேசிய இந்திய திராவிட மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவர் டாக்டர் வீரா சிதம்பரம் 2016-ல் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதிய அணியை உருவாக்க கொங்குநாடு ஜனநாயக கட்சியின் வழிகாட்டுதலை ஏற்று நடப்பதாக உறுதியளித்தார்.
50 ஆண்டு காலமாக திராவிடம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களையும்,தாழ்த்தப்படாதோர் அல்லாதவரையும் பிரித்தாண்டு தமிழகத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றிவிட்டார்கள்.
விவசாயம் மற்றும் தொழிற்துறையில் சிறந்து விளங்கிய தமிழ்நாட்டில் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.விவசாயத்தை தொழிலாளாகக் கொண்டவர்களின் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
சரியான திட்டமிடுதல் இல்லாத காரணத்தால் சிறப்பாக நடைபெற்றுவந்த பல்வேறு தொழில்கள் மின்சாரத் தடையினாலும்,மூலப்பொருட்களின் விலையேற்றத்தாலும்,ஆட்கள் பற்றாக்குறையினாலும், வெளிமாநிலங்களோடு வர்த்தக ரீதியாக போட்டியிடமுடியாத காரணத்தினாலும் மிகவும் பின்தங்கிவிட்டது.
தி.மு.க,அண்ணா தி.மு.க ஆகிய கட்சிகள் இலவசத்தையும்,மதுவையும்,பணத்தையும் நம்பியே அரசியல் செய்கின்றனர்.இயற்கை வளங்கள் முழுமையாக சுரண்டப்பட்டுவிட்டன.நீராதாரம் 1800அடிக்குக் கீழ் சென்றுவிட்டது.
 தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் ஒழிய தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.கொலை,கொள்ளை,பாலியல் குற்றங்கள் போன்றவை அதிகரிக்க மது மிகமுக்கியமான காரணமாக அமைந்துவிட்டது.
2-இலட்சம் கோடி கடன்,நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துக்கழகம் மற்றும் மின்சார வாரியம்.தமிழகத்தில் உண்டாகும் நிதிப்பிரச்சனையை யாராலும் தீர்க்க முடியாது.
 எனவே தமிழகத்தில் அரசியல் ரீதியாக மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து சமுதாயங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே மாற்றத்தைக் காண முடியும்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தின்படி கொங்குமண்டலத்தில் 30% மேல் வாழ்ந்துவரும் அருந்ததிய மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும்பகுதியில் தீவிர அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தையும்,மதுவுக்கெதிரான பிரச்சாரத்தையும் கொங்குநாடு ஜனநாயக கட்சியோடு இணைந்து அருந்ததியர் மக்களிடம் முன்னெடுத்துச் செல்வதென முடிவு செய்யப்பட்டது.

Leave a Response