மீண்டும் மகிழ்திருமேனி டைரக்சனில் நடிக்கிறார் அருண்விஜய்..!


‘தடையற தாக்க’ படத்தின் மூலம் அருண்விஜய்யின் நடிப்பில் ஒரு புதிய மாற்றத்தை கொண்டுவந்து அவரை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியதில் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு முக்கிய பங்கு உண்டு. அதை தொடர்ந்து ஆர்யாவை வைத்து ‘மீகாமன்’ படத்தை இயக்கிய மகிழ்திருமேனி, மீண்டும் அருண்விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.. ‘குற்றம்-23’ தயாரிப்பாளர் இந்தர்குமார் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளார்.

ஈரம் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான குற்றம் 23 திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹீரோவாக அருண் விஜய்க்கு சிறந்த கம் பேக் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். எனவே தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். இந்த நிலையில் மகிழ்திருமேனியுடன் அவர் இணைந்திருப்பது அவரது மார்க்கெட்டை இன்னும் வலுவாக்கும் என்பது உண்மை.

Leave a Response