
சசிகுமாரை வைத்து ‘பிரம்மன்’ படத்தை எடுத்த சாக்ரடீஸ் அடுத்து விஷாலை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.. ‘சுமார் ஒன்பது வருடங்களுக்கு முன் ‘சத்யம்’ படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்தார் நயன்தாரா.
கதை பிடித்திருந்தால் எந்த ஹீரோவாக இருந்தாலும் சரி உடனே நடிக்க ஓகே சொல்லிவிடுகிறார் நயன்தாரா. என்றாலும் முதலில் இந்த படத்தில் நடிக்க நயன்தாரா தயங்கியதாகவும், பிறகு நடிகர் விஷால்தான் அவரிடம் பேசி, நயன்தாராவை சம்மதிக்க வைத்தார் என்றும் சொல்கிறார்கள்


