வெற்றி கொடுத்தும் கூட, சங்கடத்தையே சந்திக்கும் பார்த்திபன்..!


சீனியர் இயக்குனர்கள் பலரும் பந்தய பாதையில் இருந்து விலகி தாங்கள் இருக்கிற இடம் தெரியாமலேயே போய்விட, இயக்குனர் பார்த்திபன் மட்டும் ஒரு நடிகராக, இயக்குனராக தனது இருப்பை கடந்த 27 வருடமாக தக்கவைத்து வருகிறார் என்பது ஆச்சர்யமான விஷயம்.. அந்தவிதமாக கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்கிற வெற்றிப்படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கியுள்ள புதிய படம் கோடிட்ட இடங்களை நிரப்புக.

இதில் சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். பார்த்திபன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். “ஒரு வெற்றிப் படம் கொடுத்தால் தயாரிப்பாளர்கள் தேடி வருவார்கள் என்று நினைத்தேன், ஆனால் ரசிகர்கள் அவரை நம்பிய அளவிற்கு தயாரிப்பாளர்கள் நம்பவில்லை என்று அவருக்கு தாமதமாகத்தான் புரிந்ததாம்.

அதனால் கிரவுட் பண்டிங் முறையில் படத்தை தயாரிக்க முடிவு செய்த அவருக்கு. அதிலும் முழு வெற்றி கிடைக்கவில்லை பத்து பேர் ஆளுக்கு 10 லட்சம் அவரை நம்பி கொடுத்தார்கள். அதோடு அவருடைய சில சொத்துக்களை விற்று பணம் போட்டு இந்தப் படத்தை எடுத்து முடித்துள்ளார் பார்த்திபன்.

அதேபோல ரிலீசிலும் பார்த்திபன் தனியாகத்தான் போராட வேண்டியிருக்கிறது.. படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. படத்தை வாங்க யாரும் முன்வராததால் டிசம்பர் 23ந் தேதி தானே வெளியிடப்போவதாக பார்த்திபன் அறிவித்திருக்கிறார்.

Leave a Response