‘சைத்தான்’ இயக்குனர் படத்தின் கதாநாயகி ஆனார் வரலட்சுமி..!


விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘சைத்தான்’ படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஆச்சர்யம் என்னவென்றால் ‘சைத்தான்’ படம் வெளியாவதற்கு முன்னரே சிபிராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றுவிட்டார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.. சத்யராஜின் நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்துவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப்படத்தில் ஏற்கனவே ஒரு கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகி இருந்தார். தற்போது, இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி ஒப்பந்தம் ஆகியுள்ளார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுக்கும் வரலட்சுமிக்கு இந்தப்படத்தில் அவர் இதுவரை ஏற்றிராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்..

Leave a Response