சந்தானம் ஜோடியானார் ‘அநேகன்’ நாயகி..!


சந்தானத்திற்கு கதாநாயகன் ஆகலாம் என சிக்னல் கொடுத்து தன்னம்பிக்கையும் கொடுத்த படம் தான் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா..? அதன்பின் முழு நேர ஹீரோவாக மாறி சமீபத்தில் தில்லுக்கு துட்டு படம் வரை சீரானா வளர்ச்சியில் தனது ஹீரோ பயணத்தை தொடர்ந்து வருகிறார் சந்தானம்..

இந்தநிலையில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்து, படப்பிடிப்பையும் வரும் நவ-7ஆம் தேதி துவங்க இருக்கிறார்கள்.. இந்தப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடிப்பவர் ‘அநேகன்’ பட நாயகி அமைரா தஸ்தர்.

என்ன..? சந்தானத்துக்கு ஜோடி அமைராவா என வாயை பிளக்க வேண்டாம்.. அமைராவை ஜோடியாக்க சந்தானம் ஒப்புக்கொண்டு விட்டாரா என மாற்றி கேளுங்கள்.. ஏனென்றால் இன்றைய தேதியில் அமைரா என்ன, அமலாபாலை விட பத்து மடங்கு மார்க்கெட் வேல்யூ உள்ளவர் சந்தானம்.

Leave a Response