சிம்பு படம் ரிலீசுக்கு தேதி குறித்த கௌதம் மேனன்..!


சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை கடந்த நான்கு வருடங்களாக எடுத்து வந்த இயக்குனர் கௌதம் மேனன் ஒருவழியாக கிட்டத்தட்ட படத்தின் அனைத்து வேலைகளையும் நெருக்கி போஸ்ட் புரடக்சன் பணியையும் முடித்துவிட்டாராம். ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் ரவி என்பவர் படத்தை வாங்கி ரிலீஸ் பண்ணுகிறார்.

அதனால் நவ-11ஆம் தேதி படத்தை உறுதியாக ரிலீஸ் பண்ணி விடுவோம் என்றும் ஒரு டிவி ஷோ ஒன்றிலேயே வாக்களித்தும் விட்டாராம். படம் ஷூட்டிங் முடியும் வரை சிம்பு பிரச்சனையாக இருப்பார் என்றால், அதன்பின்னர் சிம்பு படத்திற்கு பிரச்சனைகள் எல்லாம் ரிலீஸ் தேதி அறிவித்த பின்னாடி தானே ஒவ்வொன்றாக அணிவகுக்கும்.. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.

Leave a Response